முரசு புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தது குறித்து... ஹெலிகாப்டரில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம் - எக்ஸ் முரசு புயலால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று புதன்கிழமை (நவ. 4) ஆய்வு செய்தார். வங்கக் கடலில் தீவிர புயலாக உருவான முரசு, தெற்கு ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர், நரசாபுரம் இடையே செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்தது. முதற்கட்ட தகவலின்படி, இந்தப் புயலால் 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 465 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 52,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சுமார் ரூ. 343 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிப்புகளை சரி செய்யவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியிலும் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், முரசு புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான குண்டூர், பிரகாசம் மற்றும் பாபட்லா மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், சிலக்கலுரிப்பேட்டை, ஓங்கோல், கொத்தப்பட்டினம், சீனகஞ்சம், சீராலா, பாபட்லா பகுதிகளில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களை விரைந்து வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
முரசு புயல்: வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த ஆந்திர முதல்வர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗