முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படம் | மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்) வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 27 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணியில் அதிகபட்சமாக நயீம் ஹாசன் 91 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். ஜேக்கர் அலி 22 ரன்களும், ஷாத்மன் இஸ்லாம் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும், ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 35.1 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் பிரண்டன் கிங் 115 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜான் கேம்பெல் 49 ரன்களும், காவெம் ஹாட்ஜ் 31 ரன்களும் எடுத்தனர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஜோமல் வாரிக்கனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை