முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. பென் டக்கெட் சதம் விளாசல்; இலங்கைக்கு 387 ரன்கள் இலக்கு! முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் பாண்டன் மற்றும் பென் டக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 163 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய டாம் பாண்டன் 75 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 பந்துகளில் 167 ரன்கள் எடுத்தார். அதில் 24 பவுண்டரிகள் அடங்கும். பென் டக்கெட்டின் விக்கெட்டினை எஷான் மலிங்கா வீழ்த்தினார். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் 44 ரன்கள், வில் ஜாக்ஸ் 30 ரன்கள், ஜோர்டான் காக்ஸ் 43 ரன்கள் மற்றும் சாம் கரண் 21* ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ இரண்டு விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷங்கா, எஷான் மலிங்கா மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி! 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 45.1 ஓவர்களில் 331 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய பவன் ரத்நாயகே சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் குசல் மெண்டிஸ் அரைசதம் விளாசினார். அவர் 71 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவிஷ்கா ஃபெர்னாண்டோ 48 ரன்கள், சஹான் 30 ரன்கள், ஜனித் லியாநாகே 27 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்து தரப்பில் லியம் டாஸன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சோனி பேக்கர் இரண்டு விக்கெட்டுகளையும், சாம் கரண், ஹென்றி க்ரோகோம்ப் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்த முத்தரப்பு தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி, கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கனவே முத்தரப்புத் தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை