பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனின் செயல்கள் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருவது குறித்து... சுத்தம் செய்யும் டிடிஎஃப் வாசன் - எக்ஸ் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனின் செயல்கள் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. கழிப்பறைப் பகுதியில் தங்கள் அணியினர் குப்பைகளைக் கீழே கொட்டிவிட்டுச் சென்றதற்காக அதனை ஷாதிகாவும் டிடிஎஃப் வாசனும் சுத்தம் செய்தனர். அப்போது பெண்கள் பயன்படுத்திய நாப்கின்கள் குப்பையில் இருந்ததால், வாசனை குப்பைகளை கீழே போட்டுவிட்டு வெளியேறுமாறு ஷாதிகா கூறினார். எனினும் அதனை பொருட்படுத்தாத வாசன், நானும் அக்கா, தங்கைகளுடன் பிறந்தவன்தான் எனக் குறிப்பிட்டு குப்பைகள் முழுவதையும் சுத்தம் செய்ய ஷாதிகாவுக்கு உதவினார். டிடிஎஃப் வாசனின் உள்நோக்கமற்ற இந்த செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. விளையாட்டுத்தனமாக இருந்தாலும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளும் டிடிஎஃப் வாசனின் பண்பு பலரைக் கவர்ந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் குயிக் கன் கெளவ்பாய்ஸ், மைனிங் மாஃபியாஸ் என்ற போட்டியை புதிதாக அறிமுகம் செய்துள்ளார் பிக் பாஸ். இதுவரை எந்தவொரு சீசனிலும் இந்த போட்டி வைக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் முதல்முறையாக கொண்டுவரப்பட்டுள்ளது இப்போட்டியில், மைனிங் மாஃபியாஸ் அணி பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யும் உழைப்பாளிகள். இந்த வாரம் முழுக்க இடையிடையே போட்டிகள் வைக்கப்படும். இப்போட்டிகளில் கெளபாய்ஸ் அணி வெற்றி பெற்றால் கிச்சனை ரெய்டு செய்யலாம். மைனிங் மாஃபியாஸ் வெற்றி பெற்றால் கிச்சனை காப்பாற்றும் அதிகாரம் கிடைக்கும். அவ்வாறு, கிச்சனை ரெய்டு செய்யும்போது கெளவ்பாய்ஸ் அணியினர் குப்பைகளை கழிப்பறை முழுவதுமே கொட்டிவிட்டுச் சென்றனர். அதனை ஷாதிகாவும், டிடிஎஃப் வாசனும் சேர்த்து சுத்தம் செய்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் அக்கா, தங்கைகளுடன் பிறந்தவன்! பிக் பாஸ் டிடிஎஃப் வாசனுக்கு குவியும் பாராட்டுகள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗