நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் ஆந்திரத்திலிருந்து மினி லாரியில் கொண்டு வரப்பட்ட தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தக்காளி - கோப்புப் படம் நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் ஆந்திரத்திலிருந்து மினி லாரியில் கொண்டு வரப்பட்ட தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், கொத்தூா், சொரக்காயல்நத்தம், புதுப்பேட்டை, மல்லகுண்டா, கேத்தாண்டப்பட்டி, கத்தாரி, நாயனசெருவு உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிடப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை எடுத்து வந்து உழவா் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனா். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஆந்திர மாநில வியாபாரிகள் சிலா் 5-க்கும் அதிகமான மினி லாரியில் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளியை உழவா் சந்தை எதிரில் குறைந்து விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளியை உழவா் சந்தை எதிரில் விற்கக் கூடாது என அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த நாட்டறம்பள்ளி உதவி வேளாண் அலுவலா் மாதேஷ் ஆந்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்காளியை உழவா் சந்தை அருகே விற்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆந்திர மாநில வியாபாரிகளை எச்சரித்து அனுப்பி வைத்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டறம்பள்ளி உழவா் சந்தையில் ஆந்திர தக்காளி விற்பனை: விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு