நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
நேபாளத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்த பயணி உயிரிழப்பு

பட மூலாதாரம், Nepal Police நேபாளத்தில் எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு அருகே உள்ள ஃபெரிச்சே கிராமத்தில் தரையிறங்க முயன்ற இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இணைச் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் பிபிசியிடம் தெரிவித்தார். உயிரிழந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பயணி என்று சோலுகும்பு மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி பூபேந்திர தாபா தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவர் கூறினார். இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் காத்மாண்டுவிலும், மற்ற இருவர் லுக்லாவிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் ஃபிஷ்டெய்ல் ஏர் மற்றும் ஏர் டைனஸ்டி நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் மலைப்பயணப் பாதையில் அமைந்துள்ள இந்தக் கிராமம் கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் சற்றே அதிகமான உயரத்தில் உள்ளது. உயிரிழந்தவரின் உடல் லுக்லா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஃபிஷ்டெய்ல் ஏர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. பட மூலாதாரம், Nepal Police காயமடைந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்றும், இரு ஹெலிகாப்டர்களின் நேபாளத்தைச் சேர்ந்த விமானிகளும் காயமடைந்துள்ளனர் என்றும் சோலுகும்பு மாவட்டத்தின் உதவி தலைமை மாவட்ட அதிகாரி பூபேந்திர தாபா தெரிவித்தார். ஃபிஷ்டெய்ல் ஏர் ஹெலிகாப்டரின் விமானி சிகிச்சைக்காகக் காத்மாண்டுவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றொரு ஹெலிகாப்டரின் விமானியும் நியூசிலாந்தைச் சேர்ந்த பயணியும் ஹெலிகாப்டர் மூலம் லுக்லாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். End of அதிகம் படிக்கப்பட்டது காலை 8:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. "லுக்லாவிலிருந்து சென்றுகொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரும், அடிவார முகாமுக்கு அருகிலுள்ள கோரக்ஷேப்பிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டரும் ஒரே இடத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது," என்று புல் கூறினார். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு விபத்துக்கான தெளிவான காரணம் இதுவரை தெரியவில்லை. "அந்தப் பகுதியில் வேறு ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளங்களும் உள்ளன. ஆனால், அவை பனியால் மூடப்பட்டிருந்ததால், இரண்டும் ஒரே தளத்தில் தரையிறங்க முயன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது," என்று புல் கூறினார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில், இரண்டு ஹெலிகாப்டர்களும் எதிரெதிர் திசைகளிலிருந்து வருவதும், அவற்றில் ஒன்றின் சுழல்தகடு மற்றொரு ஹெலிகாப்டரின் மீது மோதுவதும் தெரிகிறது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசி நியூஸ் நேபாள சேவை உறுதிப்படுத்தவில்லை. எனினும், உள்ளூர் ஊடகங்களும் அந்தக் காணொளியை ஒளிபரப்பியுள்ளன. விபத்தின்போது இரண்டாவது ஹெலிகாப்டரின் பின்பகுதி உடைந்து சிதறியதுடன், அதன் முன்பகுதி தரையில் புதைந்திருப்பதும் காணொளியில் தெரிகிறது. அதற்கு நேர் முன்னால் நின்றுகொண்டிருந்த சிலர், தப்பிப்பதற்காக ஓடுவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. தற்போது எவரெஸ்ட் பகுதியில் உள்ள ஆமாதப்லம் மலையில் ஏறுவதற்கான உச்சப் பருவம் நிலவுகிறது. இலையுதிர் காலம் அந்தப் பகுதியில் மலைப்பயணம் மேற்கொள்வதற்கும் பிரபலமான பருவமாகும். ஹெலிகாப்டர் மூலம் எவரெஸ்ட் அடிவார முகாமுக்குச் சென்று, இடையிலுள்ள கிராமங்களில் சிறிது நேரம் தங்கி 'காலை உணவு' சாப்பிடும் சுற்றுலாப் பயணத் திட்டங்களும் அந்தப் பகுதியில் பிரபலமாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை