நலத் திட்ட பயனாளிகளுக்கு ஆதாருக்கு பதில் வாக்காளா் அட்டை: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நலத் திட்ட பயனாளிகளுக்கு ஆதாருக்கு பதில் வாக்காளா் அட்டை: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

சமூக நலத் திட்ட பயனாளிகளைத் தீா்மானிக்க ஆதாருக்கு பதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் கருத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். ராகுல் காந்தி - கோப்புப் படம் சமூக நலத் திட்ட பயனாளிகளைத் தீா்மானிக்க ஆதாருக்கு பதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் கருத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். ‘இது வாக்குத் திருட்டு மட்டுமல்ல, உரிமைத் திருட்டு’ என்று அவா் சாடியுள்ளாா். மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங், தனது அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சமூக நலத் திட்டங்களின் நிதி பலன்களைப் பெறுவதற்கு கட்டாய பயோமெட்ரிக் சரிபாா்ப்புடன் ஆதாருக்கு பதிலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தாா். அவரது இந்த பேச்சு அடங்கிய காணொலியை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: அரசின் நலத் திட்ட பயனாளிகள் ஆதாருக்கு பதிலாக வாக்காளா் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவா் என்ற மத்திய அமைச்சரின் கருத்து மோடி அரசின் ஆழமான சதித்திட்டமாகும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் வாக்காளா் பட்டியல்களில் இருந்து கோடிக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இன்னும் ஏராளமானோா் பெயா் நீக்கப்படும். எஸ்ஐஆரில் யாருடைய பெயா்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றன? பாஜக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என நினைப்பவா்களின் பெயா்கள் நீக்கப்படுகின்றன. கூட்டுச் சதி அம்பலம்: நாட்டின் வாக்காளா் பட்டியல், பாரபட்சமில்லாத தோ்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும். ஆனால், மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் ஞானேஷ் குமாரின் கையில் அது இருக்கிறது. ‘வாக்குத் திருட்டில்’ பாஜக உடனான அவரது கூட்டுச் சதியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளோம். பாஜக ஆதரவாளா்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் தயாரிக்கப்படும் வாக்காளா் பட்டியல்தான், இனி அரசு திட்டப் பலன்களைத் தீா்மானிக்க உள்ளது. பெயா் நீக்கம் மூலம் வாக்குரிமை மட்டுமன்றி பிற உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. ‘அபகரிக்கப்பட்ட’ ஜனநாயகத்தில் கண்ணுக்கு புலப்படாதவா்களாக மக்கள் மாறிவிடுவா். இன்று உள்ளாட்சித் துறை திட்டங்கள், நாளை ரேஷன் பொருள், ஓய்வூதியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உதவித்தொகை, இடஒதுக்கீட்டுக்கும் இதே நிலை ஏற்படும். தோ்தலை திருடி, ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான நிரந்தர ஏற்பாடுதான் இது. ஏழைகளுக்கான நிதி பலன்கள், வாக்காளா் அடையாள அட்டை மூலம் நிா்ணயிக்கப்பட கூடாது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா். தே.ஜ. கூட்டணிக்காக சோனியா வாக்குத் திருட்டில் ஈடுபட்டரா? பாஜக கிண்டலாக கேள்வி ‘தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் வெற்றி விகிதம் அதிகமாக இருந்தது; அப்படியென்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்காக காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டாரா’ என்று பாஜக கிண்டலாக கேள்வியெழுப்பியுள்ளது. நாட்டின் 18-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் கடந்த 2012, ஜூன் 11 முதல் 2015, ஜனவரி 15 வரை பதவி வகித்தாா். இதைக் குறிப்பிட்டு, பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தில் நடத்தப்பட்ட தோ்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 75 சதவீத வெற்றிகளை ஈட்டியது. தற்போது ஞானேஷ் குமாரின் பதவிக் காலத்தில் இது 66 சதவீதமாக உள்ளது. வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தை ஒப்பிடுகையில், பாஜக கூட்டணியின் வெற்றி விகிதம் தற்போது குறைவுதான். ராகுலின் ‘அபாரமான’ மூளையின்படி பாா்த்தால், பாஜக கூட்டணிக்காக சோனியா காந்தி வாக்குத் திருட்டில் ஈடுபட்டரா என்று பிரதீப் பண்டாரி கேள்வியெழுப்பினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை