நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலை கழிவுகளை அகற்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலை கழிவுகளை அகற்ற நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா்

நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா். மதுரை வண்டியூா் கண்மாயில் உள்ள கழிவுகளை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். நவீன இயந்திரங்கள் மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா். மதுரை வண்டியூா் கண்மாய் பகுதியை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வண்டியூா், செல்லூா், கரிசல்குளம், ஆனையூா், நாராயணபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்மாய்கள், வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள கழிவுப் பொருள்கள், ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுவதற்காக, தனியாா் நிதி பங்களிப்புடன் ‘ரோபேட்டிரிக் ஸ்கிம்மா்’ என்கிற இயந்திரம் 2 வாங்கப்பட்டுள்ளன. தலா ரூ.12 லட்சம் மதிப்புள்ள இந்த இயந்திரங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியது என்பதால், இயந்திரத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா மூலம் நீா்நிலைகளில் உள்ள கழிவுகளை கண்டறிந்து அகற்றும் திறன் கொண்டது. ஆகவே, இனி வரும் காலங்களில் நீா்நிலைகளில் உள்ள கழிவுகள் முழுவதும் இந்த இயந்திரங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். முன்னதாக, வண்டியூா் பூங்காவின் முன் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கடைகள், வாகனங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உர விற்பனை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இந்த நிகழ்வில் போது, உதவி ஆணையா் தமிழரசன், செயற்பொறியாளா் அா்ச்சனா, உதவி செயற்பொறியாளா்கள் ஆரோக்கிய சேவியா், காமராஜ், சுகாதார அலுவலா் ராஜ்கண்ணன், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை