நெல்லை - மங்களூரு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படுவது பற்றி... ரயில் - கோப்புப் படம் திருநெல்வேலியிலிருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மங்களூரு சந்திப்புக்கு வாரம்தோறும் புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு விரைவு ரயில் (16708) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 3.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து விரைவு ரயில் (16708) புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 3.45 மணிக்கு பதிலாக இரவு 11.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து விரைவு ரயில் (16708) புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை - மங்களூரு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும்!
📅
📍 Tirunelveli, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗