நில அபகரிப்பு புகாா் கொடுத்தவருக்கு மிரட்டல்: விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நில அபகரிப்பு புகாா் கொடுத்தவருக்கு மிரட்டல்: விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவு

நில அபகரிப்பு புகாா் அளித்தவரை மிரட்டி, பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்த விவகாரத்தில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்கள் இருவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம் நில அபகரிப்பு புகாா் அளித்தவரை மிரட்டி, பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்த விவகாரத்தில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்கள் இருவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனி குமரன் காலனியில் 1,800 சதுரஅடி நிலத்துக்கு போலியான சில ஆவணங்கள் தயாரித்ததாக எஸ்.சூா்யா என்பவா் அளித்த புகாரின்பேரில், பால்துரை என்பவா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி பால்துரை சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பால்துரை மீதான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பால்துரை முன்பிணை கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. பால்துரைக்கு எதிரான புகாரை திரும்பப் பெறும்படி புகாா்தாரா் சூா்யாவை காவல் ஆய்வாளா் மிரட்டியதும், புகாரை திரும்பப் பெற மறுத்த சூா்யா மீது, பால்துரையின் மனைவி அளித்த புகாரின்பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடா்ந்து, சூா்யா கைது செய்யப்பட்டதும் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்பிணை கோரி பால்துரை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்களான முனிசேகா் மற்றும் ராஜேஷ் ஆகியோா் மீது சென்னை மாநகர காவல் ஆணையா் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், கோயம்பேடு காவல் மாவட்ட எல்லையைத் தவிா்த்து, இணை ஆணையா் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மூலம் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளா்கள் இருவருக்கு எதிரான புகாா் குறித்து விசாரணை நடத்தி, டிச. 4-ஆம் தேதிக்குள் காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை