அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குறித்து... மழை - பிரதிப் படம் அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முரசு புயல் ஆந்திர கடற்கரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடலூர் மாநகரப் பகுதிகள், முதுநகர், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூர், தாழங்குடா, ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகள் நேற்று (நவ. 4) பலத்த மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வளிமண்டல சுழற்சி நிலவுவதால், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழை! (நவ. 4)