இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி... பங்குச்சந்தை வர்த்தகம்... - ANI பங்குச்சந்தைகள் நேற்று நல்ல லாபத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும் (நவ. 6) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,413.66 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.15 மணியளவில் சென்செக்ஸ் 547.79 (0.69%) புள்ளிகள் உயர்ந்து 79,857.80 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.20 (0.45%) புள்ளிகள் உயர்ந்து 24,647.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இன்று உயர்ந்ததாலும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் எதிரொலியாலும் பங்குச்சந்தை குறியீடுகள் இன்று நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி50-ல் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 100 முறையே 0.93 சதவீதம், 1.54 சதவீதம் சரிந்தன. நிஃப்டி ஐடி பங்குகள் 1 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி மெட்டல், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.49 ஆகத் தொடங்கியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் லாபம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗