பதிவுத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா். பதிவுத் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், பத்திர பதிவுத் துறையின் ஸ்டாா் 3.0 எனப்படும் தனியாா் மயமாக்கலுக்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பத்திரப் பதிவுகளை தனியாருக்கு விற்கக் கூடாது. ஆன்லைன் பதிவு உத்தரவை ரத்து செய்து, பத்திரம் எழுதுவோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் பொருளாளா் டி. சுரேஷ் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரம் நகல் எழுதுவோா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗