‘பட்டாசு வெடிக்காதீர்’ என்ற தியா மிர்சா வீடியோவை மீண்டும் பதிவேற்ற மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
‘பட்டாசு வெடிக்காதீர்’ என்ற தியா மிர்சா வீடியோவை மீண்டும் பதிவேற்ற மாநகராட்சிக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: அதிகரித்து வரும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என நடிகை தியா மிர்சா கேட்டுக்கொண்ட வீடியோவை மீண்டும் மும்பை மாநகராட்சி சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்ற மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை மாநகராட்சி சார்பில் மாசு இல்லாத தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்துக்காக நடிகைகள் தியா மிர்சா, மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட், கிரிக்கெட் வீரர் அஜிங்கே ரஹானே உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த விழிப்புணர்வு வீடியோக்கள் மும்பை மாநகராட்சியின் சமூக ஊடக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டன. இதில், “தியா மிர்சா தனது வீடியோவில், தீபாவளியை பொதுமக்கள் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம்.” என கேட்டுக்கொண்டார். தியா மிர்சாவின் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பையைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அமீத் சதம், ‘தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்று தியா மிர்சா எங்களுக்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. எங்கள் பாரம்பரியம் எங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, தியா மிர்சாவின் வீடியோ மாநகராட்சி சமூக ஊடக பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிரீஷ் குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, “சில அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற கருத்துக்கள் மிகுந்த மன வேதனையை அளித்துள்ளன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இவர்கள் நீதிமன்றத்தின் முந்தையை உத்தரவைக் கவனத்தில் கொள்ளாமல் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் இந்த அணுகுமுறை சரியல்ல. அவர்கள் இதற்கு வேறு எந்த கோணத்தையும் கொடுக்கக்கூடாது. தியா மிர்சா நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படியே செயல்பட்டார். இது முற்றிலும் சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரம். இதற்கு வேறு எந்த பரிமாணத்தையும் கொடுக்காதீர்கள். நாம் அனைவரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். நேற்று நடந்த நிகழ்வு (வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்) மிகவும் துரதிருஷ்டவசமானது. இது குறத்து நாங்கள் மிகுந்த வேதனை அடைகிறோம். இத்தகைய அவசரமான எதிர்வினை தேவையற்றது. அந்த வீடியோவில் பகிரப்பட்ட செய்தி, மதம், சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையிலேயே இருந்தது. சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் நாம் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் சமூகத்துடன் ஒன்றிணைந்த உணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இது என்ன மாதிரியான குறுகிய மனப்பான்மை. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவர் முன்வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவரை ஏன் கண்டிக்க வேண்டும்? சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த தியா மிர்சாவின் வீடியோவை மும்பை மாநகராட்சி நீக்கியது ஆழ்ந்த அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவை மும்பை மாநகராட்சி மீண்டும் பதிவேற்ற வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை