பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்திருப்பது பற்றி... அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம் பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் புகார் மனு அளித்துள்ளார். பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கட்டுரை இலக்கிய மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை இன்று நேரில் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், புகார் மனுவை வழங்கினார். அதில், பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும். பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, பிற பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்பட்ட முறை குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗