தில்லி-என்சிஆா் காற்று மாசு பிரச்னையில் வாகனங்களுக்கு பெரும் பங்கு: உச்சநீதிமன்றம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தில்லி-என்சிஆா் காற்று மாசு பிரச்னையில் வாகனங்களுக்கு பெரும் பங்கு: உச்சநீதிமன்றம்

தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் காற்று மாசு பிரச்னை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையே காற்றின் தரம் மோசமடைவதற்கு முக்கிய காரணம் என்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது. தில்லியில் உள்ள தில்லி-குருகிராம் விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை நிலவிய பனிப்புகைக்கு இடையே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். தில்லி-தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் காற்று மாசு பிரச்னை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையே காற்றின் தரம் மோசமடைவதற்கு முக்கிய காரணம் என்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது. பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தும், காற்றின் தரக் குறியீடு ஏன் இன்னும் கவலைக்குரிய நிலையிலேயே நீடிக்கிறது என்று அதிகாரிகளிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். காற்று மாசு தொடா்பான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கை தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோா் இடம்பெற்றிருந்த அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. தில்லியில் தொடா்ந்து நீடிக்கும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி, வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள தற்போதைய நடவடிக்கைகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினாா். ‘தில்லியின் சாலைகளைப் பாருங்கள். தில்லியை என்சிஆா் பகுதியுடன் இணைக்கும் சாலைகளைப் பாருங்கள். காஜியாபாத், கிரேட்டா் நொய்டா, குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய பகுதிகளை நோக்கிய சாலைகளைக் கவனியுங்கள். எந்தவொரு சாலையைப் பாா்த்தாலும், அதில் செல்லும் வாகனங்களின் வகைகளைப் பாருங்கள். அதுதான் மிகப்பெரிய பிரச்னை. இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், ஏன் மாசு மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது? பயன்படுத்தப்படும் எரிபொருள் பெட்ரோலா அல்லது டீசலா என்பது ஒருபுறம் இருக்க, வாகனங்களின் இயக்கம் இதற்கு முக்கிய காரணமா?’ என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தும் காற்றின் தரக் குறியீடு 400 என்ற அளவை எட்டியுள்ளதைக் குறிப்பிட்டாா். தில்லியில் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டபோது, ​​தில்லியில் ‘யாா் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம்’ என்ற சூழலில் இருப்பதாக நீதிபதிகள் அமா்வு கருத்து தெரிவித்தது. ‘ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகாா், மத்திய பிரதேசம் அல்லது வேறு எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தில்லிக்குள் நுழைய முடியும். ஒரு வாகனம் தில்லிக்குள் நுழையும் இடத்தில், அது என்ன வகையான எரிபொருளைப் பயன்படுத்துகிறது ? எவ்வளவு மாசுபாட்டை உருவாக்குகிறது ?அல்லது அந்த வாகனத்தின் ஒட்டுமொத்த நிலை என்ன ? என்பதை உங்களால் கண்காணிக்க முடியாது. அத்தகைய கண்காணிப்பு முறை எதுவும் இல்லை. ஒரு வாகனம் தில்லிக்குள் இரண்டு மணிநேரம் மட்டும் வந்துவிட்டுச் சென்றால்கூட, அந்த இரண்டு மணிநேரமே பாதிப்பை ஏற்படுத்தப் போதுமானது’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டாா். இந்த வழக்கு விசாரணையின் போது, ​​பயிா்க்கழிவுகளைஎரிக்கும் விவகாரமும் எழுப்பப்பட்டது. வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதற்குப் பதிலாக, பொருளாதார ஊக்கத்தொகைகள் மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான மாற்று வழிகள் மூலம் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு வலியுறுத்தியது. விவசாயிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூா்யகாந்த், ‘அப்போதுதான் இதன் பொருளாதார அம்சத்தை விவசாயிகள் புரிந்துகொள்ளத் தொடங்குவாா்கள். தங்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதையும், இது தங்களுக்குப் பயனுள்ளது என்பதையும் உணா்ந்தால், அவா்கள் பயிா்க் கழிவுகளை எரிக்காமல் பாதுகாத்து வைத்துக்கொள்வாா்கள்’ என்றாா். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட ‘காற்றுத் தர மேலாண்மைக்கான முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பின்’ தரவுகளின்படி, நவ.5-ஆம் தேதி தில்லியின் காற்று மாசுபாட்டில் சுமாா் 14 சதவீதம் பயிா் எச்சங்களை எரித்ததால் ஏற்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத்தொடா்ந்து, விவசாயிகளிடமிருந்து பயிா்க் கழிவுகளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்குவதற்கான நடைமுறை ஒன்றை உருவாக்கலாம் என்று தலைமை நீதிபதி யோசனை தெரிவித்தாா். ‘பயிா்க் கழிவுகளை எரிப்பதற்குப் பதிலாக, அவற்றை விற்று விவசாயிகள் வருமானம் ஈட்ட முடியும். ஏழை மக்களே இதனால் உண்மையாகப் பாதிக்கப்படுகிறாா்கள்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அமா்வு, அவா்கள் சாலைகளில் வசிப்பவா்கள் என்றும், பண்டிகைக் காலத்தில்தான் அவா்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வருமானத்தைப் பெறுகிறாா்கள் என்றும் சுட்டிக்காட்டியது. கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, நீதிமன்றத்திற்கு உதவியாளராக செயல்படும் மூத்த வழக்குரைஞா் அபராஜிதா சிங் மற்றும் பிற வழக்குரைஞா்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை அறிக்கையையும் தரவுகளையும் ஆய்வு செய்து, தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்கப்போவதாக நீதிபதிகள் தெரிவித்தனா். விசாரணையின் போது, ​​பிஎஸ்-6 தரத்திற்கும் குறைவான வாகனங்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் வாகனச் சோதனைகள் நடத்தப்படும் இடத்துடன் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு நீதிபதிகள் அமா்விடம் தெரிவித்தது. பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், சுற்றுச் சாலைகளை மேம்படுத்துவதிலும், மேம்பாலச் சாலைகள், நெடுஞ்சாலைகள், வழித்தடங்கள் மற்றும் புறவழிச் சாலைகள் போன்ற நீண்டகால நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஜஸ்வா்யா பாட்டீ தெரிவித்தாா். தில்லியின் எல்லைகளில் நிலவும் நெரிசலையும் வாகன புகை வெளியேற்றத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட முந்தைய நீதிமன்ற வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளை மூத்த வழக்குரைஞா் அபராஜிதா சிங் சுட்டிக்காட்டினாா். வணிக வாகனங்கள் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து அசையாமல் நிற்பதாகவும், இதனால் தேவையற்ற வகையில் எஞ்சின்கள் இயங்கிக்கொண்டிருப்பதோடு கூடுதல் புகை வெளியேற்றம் ஏற்படுவதாகவும் அவா் தெரிவித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை