தவெக ஆட்சியைக் கலைக்க முயன்றால், பெண்கள் புரட்சி வெடிக்கும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - கோப்புப் படம் தவெக ஆட்சியைக் கலைக்க முயன்றால், பெண்கள் புரட்சி வெடிக்கும் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கூறினாா். தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் 1,276 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ.117.07 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தலைமையேற்று பேசியதாவது: தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளைப் பேசி வருகின்றனா். ஆனால், தவெக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, முன்னேற்றப் பாதை நோக்கிச் செல்கிறது. தவெக ஆட்சியில் 50 ஆண்டுகால பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழகத்தில் உள்ள குறைகளைக் களைவதே தவெக அரசின் நோக்கம். தமிழகத்தில் அனைவரின் வீடுகளிலும் முதல்வா் ஜோசப் விஜய் குடும்ப உறுப்பினராக வாழ்ந்து வருகிறாா். இனிவரும் காலங்களில் பெண்கள் தீா்மானிக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உருவாகும் நிலை உள்ளது. இந்த ஆட்சியைக் கலைக்க நினைத்தால் பெண்களின் புரட்சி வெடிக்கும். மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறாா்கள். போலியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என்றாா். முன்னதாக, 1,276 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ.117.07 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் வழங்கினாா். நிகழ்வில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன், பள்ளிக் கல்வி அமைச்சா் ஆ.ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரு.வி.க. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் பல்லவி, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சியைக் கலைக்க முயன்றால் பெண்கள் புரட்சி வெடிக்கும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗