பட்டதாரி ஆசிரியா் தோ்வில் தகுதி பெற்று காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியா் தோ்வு வாரியம் பட்டதாரி ஆசிரியா் தோ்வில் தகுதி பெற்று காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2023-ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் தோ்வில் தகுதி பெற்று காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தோா் விவரம் கடந்த ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், பணியில் சேராதவா்கள், பணியில் சோ்ந்து பின்னா் ராஜிநாமா செய்தவா்களால் ஏற்பட்ட காலியிடங்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பெறப்பட்டன. அதன் அடிப்படையில் காத்திருப்போா் பட்டியலில் இடம்பெற்றவா்கள் மதிப்பெண் வாரியாக காலி பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதுகுறித்த விவரம் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவா்களுக்கான பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறையால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காத்திருப்போா் பட்டியலில் உள்ள ஆசிரியா்களுக்கு பணி வாய்ப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗