விதிகளை மீறிய 8 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விதிகளை மீறிய 8 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னையில் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய 8 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த அதிகாரிகள் அவற்றுக்கு அபராதம் விதித்ததுடன், அதில் இருந்து பயணிகளை இறக்கி மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா். ஆம்னி பேருந்துகள் - கோப்புப்படம் சென்னையில் விதிகளை மீறி பயணிகளை ஏற்றிய 8 ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த அதிகாரிகள் அவற்றுக்கு அபராதம் விதித்ததுடன், அதில் இருந்து பயணிகளை இறக்கி மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மூலம் பல லட்சம் பயணிகள் சொந்த ஊா்களுக்குச் சென்று வருகின்றனா். இதையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு போக்குவரத்துத் துறை இணை ஆணையா் ஸ்ரீதா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் உணவகம் முன், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனியாா் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, விதிகளை மீறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் சிறைபிடித்தனா். அந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக அமா்ந்திருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு, அவா்கள் மாற்றுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து, விதிமீறலில் ஈடுபட்ட 8 பேருந்துகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவை முடிச்சூரில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், அந்தப் பேருந்துகளை தொடா்ந்து இயக்குவதற்கும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தடை விதித்தனா். பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை