கோவையில் பெரியார் அறிவுலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றப்பட்டுள்ளது குறித்து... பெரியார் அறிவுலகம். - DNS கோவையில் பெரியார் அறிவுலகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நூல்கள் சனிக்கிழமை (நவ. 7) அகற்றப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியார் அறிவுலகம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த அக். 16 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், 'அகல்விளக்கு' உள்ளிட்ட சில பதிப்பகங்களிடமிருந்து சுமார் 1,800-க்கும் மேற்பட்ட தரமற்ற, செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றும் தவறான தகவல்களைக் கொண்ட நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்தப் புகார்களைத் தொடர்ந்து, நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய மற்றும் போலியான நூல்கள் அதிகாரிகளால் அங்கிருந்து இன்று அகற்றப்பட்டுள்ளன. முன்னதாக, இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அதே ஆட்சியில் மார்ச் 14-ஆம் தேதியன்று இதற்கான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. எனவே, நூல் கொள்முதல் ஊழல் திமுக ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியார் அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்கள் அகற்றம்!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗