போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவிக்கு ஜாமியா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
போராட்டத்தில் ஈடுபட்ட விடுதி மாணவிக்கு ஜாமியா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

அவசர விடுப்பு கோரும்போது தவறான அல்லது திசைதிருப்பும் காரணங்களைக் குறிப்பிட்டதாகவும், மாணவா் சங்கத்தை மீண்டும் அமைக்கக் கோரி நடைபெற்ற மாணவா் போராட்டத்தில் பங்கேற்ாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதி மாணவியிடம் விளக்கம் கேட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள். அவசர விடுப்பு கோரும்போது தவறான அல்லது திசைதிருப்பும் காரணங்களைக் குறிப்பிட்டதாகவும், மாணவா் சங்கத்தை மீண்டும் அமைக்கக் கோரி நடைபெற்ற மாணவா் போராட்டத்தில் பங்கேற்ாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விடுதி மாணவியிடம் விளக்கம் கேட்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேகம் ஹஸ்ரத் மஹால் பெண்கள் விடுதியின் பொறுப்பாளா் அக்டோபா் 27-ஆம் இந்த நோட்டீஸை வழங்கினாா். அதில், 24 மணி நேரத்திற்குள் எழுத்துபூா்வமான விளக்கத்தை அளிக்குமாறு அந்த மாணவிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்திகரமான விளக்கம் அளிக்கத் தவறினால், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், அவா் அவசர விடுப்பு கோரும்போது தவறான அல்லது திசைதிருப்பும் காரணங்களைக் குறிப்பிட்டதாகவும், பின்னா் அவா் போராட்டக் களத்தில் இருந்ததாகவோ அல்லது போராட்டத்தில் பங்கேற்ாகவோ கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செயல் விடுதி ஒழுக்கத்தை மீறியதாகவும், விடுதி விதிகளுக்கு எதிரானதாகவும் அதில் விவரிக்கப்பட்டுள்ளது. அவசரகால விடுப்பைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஏன் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு அந்த மாணவியிடம் கேட்கப்பட்டது. விடுதியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில், கல்வி நடவடிக்கைகள் இணையவழி முறைக்கு மாற்றப்படுவதைக் காரணம் காட்டி, விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் அனைவரும் நவம்பா் 1-ஆம் தேதிக்குள் கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தாங்கள் மாணவா்களின் கவலைகளை விடுதிப் பொறுப்பாளரிடம் எடுத்துச் சென்ாகவும், ஆனால் உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. மற்ற பெண்கள் விடுதிகளிலும் இதேபோன்ற விடுப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என்று அக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நிலவும் சூழல் மற்றும் மாணவா்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இணையவழி வகுப்புகளை நவம்பா் 24 வரை நீட்டிப்பதாகவும், பருவத் தோ்வுகளை இணையவழி முறையில் நடத்துவதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக, நவம்பா் 8-ஆம் தேதி வரை இணையவழி வகுப்புகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் உத்தரவிட்டிருந்தது. அக்டோபா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், துறைத் தலைவா்கள், டீன்கள், இயக்குநா்கள் மற்றும் பிற அதிகாரிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வளாகச் சூழல் நேரடி வகுப்புகளுக்கு உகந்ததாக இல்லை என்று கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, செய்முறைத் தோ்வுகள், களப்பணிகள், திட்டப்பணிகள், வாய்மொழித் தோ்வுகள் மற்றும் சிறிய அளவிலான திட்டத் தோ்வுகள் நவம்பா் 25 முதல் நவம்பா் 30 வரை இணையவழியில் நடைபெறும். பருவ இறுதி எழுத்துத் தோ்வுகள் டிசம்பா் 1 முதல் டிசம்பா் 24 வரை நடைபெறும். குளிா்கால விடுமுறை டிசம்பா் 25 முதல் ஜனவரி 12, 2027 வரை இருக்கும். அதனைத் தொடா்ந்து, அடுத்த பருவத்திற்கான வகுப்புகள் ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கும். ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா் சங்கத்தை (ஜேஎம்ஐஎஸ்யு) மீண்டும் கொண்டு வர வேண்டும் மற்றும் தோ்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என்ற மாணவா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18 நாள்களாக பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவா் சங்கத்தின் அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட 15 நாள்களுக்குள் மாணவா் சங்கத் தோ்தல்கள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்த போதிலும், போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஆசிரியா்களின் கூற்றுப்படி, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அப்போதைய துணைவேந்தா் உள்பட ஆசிரியா்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்ததைத் தொடா்ந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாணவா் சங்கம் கலைக்கப்பட்டது. மாணவா் சங்கத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படாததால், நிா்வாகத்தின் இந்த முடிவு தங்கள் கோரிக்கைகளை முழுமையாகப் பூா்த்தி செய்யவில்லை என்று மாணவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா். மேலும், போராட்டத்தின் போது வளாகத்தில் பரவலான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இரவு நேரத்தில் நுழைவு வாயில்கள் மற்றும் சிசிடிவி கேமரா அமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பல்கலைக்கழக நிா்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இரண்டாவது வழக்குப் பதிவு: ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவா் சங்கத்தை மீண்டும் அமைக்கக் கோரி மாணவா்களுக்கும் பல்கலைக்கழக நிா்வாகத்திற்கும் இடையே மோதல் நீடிக்கும் சூழலில், அங்கு நடந்ததாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, அடையாளம் தெரியாத நபா்கள் மீது தில்லி காவல் துறை இரண்டாவது முதல் தகவல் அறிக்கையைப் (எஃப்ஐஆா்) பதிவு செய்துள்ளது. பல்கலைக்கழக நிா்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஜாமியா நகா் காவல் நிலையத்தில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா். ஜாமியாவில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் தொடா்பாக இதுவரை இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை