ரசிகர்களின் இசை அபயங்கருக்குப் பிறந்த நாள்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ரசிகர்களின் இசை அபயங்கருக்குப் பிறந்த நாள்!

சாய் அபயங்கருக்குப் பிறந்த நாள்... இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்று தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். வாழ்க்கை மாற, மாற புதிய தலைமுறையினரின் எண்ணங்கள், சமூகத்தின் மீதான மதிப்பீடு, சுதந்திரமான முடிவுகள் என மூத்தவர்களைக் காட்டிலும் இளையவர்கள் ஒரு அடி முன்னே வரும் போது ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்த ஒரு இசைக்கலைஞர் வந்துவிடுகிறார். இப்போது, தமிழ் சினிமாவுக்கு அப்படியொரு இசைக்கலைஞராக சாய் அபயங்கர் இருப்பதாகவே ரசிகர்கள் நம்புகின்றனர். எங்கு திரும்பினாலும் சாய் அபயங்கரின் பெயரைத்தான் பார்க்க முடிகிறது. சும்மா சின்ன பையன் வந்த வேகத்தில் சென்றுவிடுவார் என நினைத்தவர்களுக்கு பதிலடியாக அதற்கெல்லாம் வாய்ப்பில்லை... இளையராஜா, ரஹ்மான், அனிருத், அதற்குப் பின் நான்தான் என்கிற அளவு அபாரமான வளர்ச்சியில் இருக்கிறார். பாடகர் திப்புவின் மகனான சாய் அபயங்கருக்கு முதல் படம் வெளியாகும் முன்பே 8 திரைப்படங்கள் கைவசம் வந்துவிட்டன. யாருக்கு வாய்க்கும்? உடனே, வழக்கம் போல் மார்கெட்டிங் மூலமே இந்த வாய்ப்புகளைச் சாய் அபயங்கர் பெற்றார் என்றும் அவரின் அப்பாவால் கிடைத்தவை என ஏகப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்தன. ஆனால், சாயின் இசையில் அடுத்தடுத்து வெளியான திரைப்பட இசைகளும் பாடல்களும் அந்த எண்ணங்களை அடியோடு மாற்றி, சாய் அபயங்கர் திறமையுடன் வேகமும் விவேகமும் கொண்ட கலைஞர்தான் என பாராட்டுகளைப் பெற செய்தது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் திரைப்பாடல்கள், பின்னணி இசைகள், ஆல்பம்கள் என அனைத்திலும் சாய் அபயங்கரின் தனித்துவம் தெரிய, ரசிகர்களும் அவரின் இசையில் ஏதோ இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள தொடங்கியிருக்கின்றனர். இன்னொரு புறம், சாய் அபயங்கர் வந்தாலே பாடல்கள் ஹிட்தான் என்கிற நம்பிக்கைகளும் தயாரிப்பாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டன. ஒலித்துல்லியம், இன்றைய போக்குகளுக்கு ஏற்ப பாடல்களையும் அதன் வரிகளையும் கையாளும் விதம் (பாடல் வரிகள் சரியாகப் புரிவதில்லை என சாய் மீது அதிருப்தி இருக்கிறது. அதை அவர் வருங்காலங்களில் கவனத்தில் கொள்ள வேண்டும்), அசத்தலான பின்னணி இசைகள் என ஒவ்வொரு திரைப்படத்திற்கும் புதியதாக ஒன்றைச் செய்ய சாய் காட்டும் விழைவும் தெரிகிறது. அண்மை உதாரணம், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம். இப்படத்திற்காக சாய் இசையமைத்த செல்லமே மகளே பாடலை வயது வித்தியாசம் இல்லாமல் ஊரே கேட்டுக்கொண்டு இருக்கிறது. ஊரோட ஒத்த டான் பாடல் ’ஹிட்டோ ஹிட்’. சொல்லப்போனால், இப்படத்தைக் காப்பாற்றிய பங்கில் சாய்க்கும் முக்கிய இடமுண்டு. ஓம் திரைப்படத்தின் பாடல்கள் மட்டுமல்லாது கிளிம்ஸ் விடியோகளின் பின்னணி இசையே பெரிய அளவில் வைரலாகியதும் குறிப்பிடத்தக்கது. இவர் பணியாற்றிய டியூட், கருப்பு, பத்தா மூன்றும் வெற்றிப்படங்களாவிட்டன. அடுத்ததாக, ஓம், ராக்கா, பென்ஸ், மார்ஷல், எஸ்கே - 27 மற்றும் தனுஷ் - 56 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் கூடுதலாக எதிர்பார்ப்பும் இருக்கிறது. சாய் அபயங்கர் பல மணிநேரம் இசைக்காக செலவிடுவதாக அவருடன் பணியாற்றுபவர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் ஒரு மூத்த இசையமைப்பாளர் பாடல் ஹிட் ஆவதற்கு முன்பே அன்பிளக்ட் (unplugged) வடிவத்தை வெளியிடுவோம் என மறைமுகமாக சாய் அபயங்கரைச் சீண்டினார். இன்னொரு இசையமைப்பாளர் தான் நாயகனாக நடித்த திரைப்படத்தில் வாரிசுகளுக்குச் சாதகமாகச் செயல்படும் நெப்போடிஸத்தை (Nepotism) சுட்டிக்காட்ட சாய்யைத் தாக்கினார். சாய் அபயங்கரின் வளர்ச்சி பலருக்கும் அதிர்ச்சியையும் வெறுப்பையும் உருவாக்கியுள்ளதை ரசிகர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், நல்ல திறமைகளை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது இல்லையா? சாய் மெல்ல மெல்ல தன் ரசிகர்களிடம் இசை அபயங்கராக மாறிவிட்டார். ஒரு பொருளைத் தயாரித்து மார்க்கெட்டிங் செய்து கடைகளுக்குக் கொண்டு வரும் வரைதான்... வந்த பின்பு நுகர்வோர் அல்லவா அதன் தரத்தை உறுதிசெய்ய வேண்டும்? ரசிகர்கள் சாய் அபயங்கருக்கு அந்த தரத்தின் அங்கீகாரத்தை வழங்கிவிட்டனர். இன்று பிறந்த நாள் கொண்டாடும் சாய் அபயங்கருக்கு வரும் வாழ்த்துகளும் ரீல்ஸ்களுமே அதற்குச் சான்று! இன்று 22 வயதில் இசையெடுத்து வைக்கும் சாய் அபயங்கருக்கு வாழ்த்துகள்! தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை