சாம்பியன்ஸ் லீக்கில் அபார வெற்றி பெற்ற பார்சிலோனா குறித்து... ஆஸ்டன் வில்லா வீரரை ஏமாற்றி, கோல் அடிக்கும் ரபீனியா - AP ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில் இங்கிலாந்து லீக்கின் சிறந்த அணிகளுல் ஒன்றாக ஆஸ்டன் வில்லா உடன் நள்ளிரவில் மோதியது. இந்தப் போட்டியில் 7ஆவது நிமிஷத்தில் லமின் யமால் கோல் அடித்தார். முதல் பாதியின் 1-0 என பார்சிலோனா முன்னிலை வகித்தது. உலகக் கோப்பையின் நாயகன் ரோட்ரி காயம் காரணமாக முதல் பாதியின் இறுதியில் வெளியேற்றப்பட்டார். இரண்டாம் பாதியில் 52, 64ஆவது நிமிஷத்தில் ரபீனியா கோல் அடித்து அசத்தினார். இவர் 70ஆவது நிமிஷத்தில் சப்ஸ்ட்யூட் மூலம் மாற்றப்பட்டார். இறுதியில் பார்சிலோனா 3-0 என ஆஸ்டன் வில்லாவை வீழ்த்தியது. ரபீனியா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலமாக பார்சிலோனா புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ரோட்ரியின் காயத்துக்கு ஸ்கேன் செய்ய செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படுமென பயிற்சியாளர் ஹன்சி பிளிக் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியல் 3. ஆஸ்டன் வில்லா 5. ரியல் மாட்ரிட் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரோட்ரிக்கு காயம்; ரபீனியா ஆட்ட நாயகன்..! இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய பார்சிலோனா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗