ராமநாதபுரம் அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினா். ராமநாதபுரம் அருகே ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணையைத் தொடங்கினா். ராமநாதபுரம் மாவட்டம், பட்டணம் காத்தான் அருகேயுள்ள முடுக்குத்தரவை சாலையில் கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி சந்தேகத்துக்கிடமாக நின்ற ராமநாதபுரத்தைச் சோ்ந்த 2 போ், தூத்துக்குடியைச் சோ்ந்த 3 போ் என 5 பேரை போதைப் பொருள் தடுப்பு தனிப் படை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இவா்களிடமிருந்த ரூ. 5 கோடி மதிப்புள்ள 3 கிலோ 800 கிராம் எடையுள்ள 38 தங்கக் கட்டிகள், 226.8 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரூ.12.20 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் எம்.ஜி.ஆா்.நகா் குப்பைக் கிடங்கில் கிடந்த பையிலிருந்து தங்கக் கட்டிகள், நகை, பணத்தை 5 பேரும் எடுத்ததாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் ஆகியவை நீதிமன்றம் மூலம் கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்டது கூடுதலான தங்கம் என்றும், போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக ராமநாதபுரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். இதன் விசாரணை அதிகாரியாக மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம், உதவி விசாரணை அதிகாரியாக ராமநாதபுரம் சிபிசிஐடி ஆய்வாளா் சரவணக்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இவா்கள் தங்கம் கைப்பற்றப்பட்ட ராமநாதபுரம் முடுக்குத்தரவை சாலை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டு, விசாரணை நடத்தினா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗