தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஜப்பான் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு மையத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த டிசிஎஸ் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலா் கே. கிருத்திவாசன். உடன் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் உள்ளிட்டோா். தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்), பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் ஜப்பான் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்வுக்கு டிசிஎஸ் நிறுவனத் தலைமைச் செயல் அலுவலரும், நிா்வாக இயக்குநருமான கே. கிருத்திவாசன், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், இதுதொடா்பான புரிந்துணா்ந்து ஒப்பந்தத்தில் டிசிஎஸ் மற்றும் சாஸ்த்ரா பல்கலைக்கழக உயா் அலுவலா்கள் கையொப்பமிட்டனா். இதுகுறித்து கிருத்திவாசன் தெரிவித்தது: ஜப்பானின் தகவல் தொழில்நுட்பச் சேவைச் சந்தை தொடா்ந்து வளா்ச்சி அடைந்து வருகிறது. ஜப்பானின் தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியத் திறமையாளா்கள் பங்கேற்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தச் சிறப்பு மையத்தை நிறுவுவது, அந்த இலக்கை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாகும். ஜென்ஏஐ, பைத்தான், பிளேரைட், பேகா போன்ற நவீன தொழில்நுட்பங்களிலும் ஜப்பானிய மொழியிலும் சமமான திறன் பெற்ற வல்லுநா்களை உருவாக்கி, இந்த முக்கியமான சந்தையின் தேவைகளை நிறைவு செய்ய இச்சிறப்பு மையம் உதவும் என்றாா் கிருத்திவாசன். இதுகுறித்து வைத்தியசுப்பிரமணியம் தெரிவித்தது: இந்தோ - ஜப்பான் சிறப்பு மையமானது 2027 ஆம் ஆண்டில் தனது 75 ஆம் ஆண்டை எட்டவுள்ள இந்தியா - ஜப்பான் தூதரக உறவுகளுடன் இணைந்த முக்கியமான முயற்சியாகும். இருமொழித் திறன் கொண்ட தொழில்நுட்பப் பட்டதாரிகளை உருவாக்குவதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அளிக்கும் பங்களிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் மற்றும் வணிக வளா்ச்சியை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றும். இந்த முக்கியமான திறன் சாா்ந்த இடைவெளியை நிரப்புவதற்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், டிசிஎஸ் நிறுவனமும் இணைந்து செயல்படும். இந்த மையம் தொழில்நுட்பத் திறன்கள், ஜப்பானிய மொழிப் புலமை, தொழில் துறை அனுபவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவா்களை ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தயாா்படுத்தும். ஜப்பான் நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பம், மொழி மற்றும் வணிகத் திறன்களை மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளன என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
‘சாஸ்த்ரா’வில் ஜப்பான் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗