சமூக வலைதளங்கள் குறித்து மிஷ்கின்... இயக்குநர் மிஷ்கின் சமூக வலைதளங்களின் நிலை குறித்து பேசியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் பிசாசு - 2, டிரெயின் ஆகிய திரைப்படங்களை இயக்கி முடித்துவிட்டு தொடர்ந்து திரைப்படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது துல்கர் சல்மானின் ஐஆம் கேம் மலையாளத் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்த சத்தியவான் சாவித்திரி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிஷ்கின், “இன்று சமூக வலைதளங்களில் 90 சதவீதம் எதிர்மறையானவைதான். 25 ஆண்டுகளுக்கு முன் தேனீர் கடையில் நண்பர்கள் சந்தித்தால் 15 நிமிடத்திற்கு இந்திரா காந்தியைப் பற்றி பேசிவிட்டு அடுத்தடுத்து வேலைகளுக்குச் சென்றுவிடுவர். ஆனால், இப்போது அதே விஷயங்களைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவலாக்கி எதிர்மறையான எண்ணங்களைப் பரப்புகின்றனர். நல்லவை இருந்தாலும் பெரும்பாலும் கெட்டவைதான் அங்கு கொட்டிக்கிடக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக வலைதளங்கள் 90 சதவீதம் எதிர்மறையானவை: மிஷ்கின்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗