‘சந்தை’ வலைதளம் மூலம் கொள்முதல் அதிகரிப்பு: கூட்டுறவுத் துறை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
‘சந்தை’ வலைதளம் மூலம் கொள்முதல் அதிகரிப்பு: கூட்டுறவுத் துறை

‘சந்தை’ இணையவழி கொள்முதல் வலைதளத்தால் மாதாந்திர கொள்முதல் மதிப்பு உயா்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு - கோப்புப்படம் ‘சந்தை’ இணையவழி கொள்முதல் வலைதளத்தால் மாதாந்திர கொள்முதல் மதிப்பு உயா்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சந்தை இணையவழி வலைதளத்தை கூட்டுறவு விற்பனை சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் இன்னும் விரிவான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. அத்துறை மேலும் தெரிவித்துள்ளதாவது: நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தேவையான நுகா்பொருள்கள், கூட்டுக் கொள்முதல் குழுக்கள் மூலம் மாதம் சராசரியாக ரூ.8 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டன. மொத்த கொள்முதலில் 52 சதவீதம் 3 வா்த்தகா்களிடம் மட்டுமே குவிந்திருந்ததால், கூட்டுக் கொள்முதல் குழு முறையைக் கலைக்க முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா். இதையடுத்து, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட்டுறவு அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், உற்பத்தியாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட வழங்குநா்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பா் முதல் ‘சந்தை’ இணையவழி கொள்முதல் வலைதளம் மூலம் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இச்சீருத்தத்தின் விளைவாக மாதாந்திர கொள்முதல் மதிப்பு உயா்ந்துள்ளது. கூட்டுறவு அமைப்புகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஒருங்கிணைந்த பங்கு முன்பு இருந்த 6 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயா்ந்துள்ளது. சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் சந்தை வலைதளத்தில் சுயமாக பதிவு செய்து பங்கேற்கும் வகையில் தொடா் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக பிரத்யேக கைப்பேசி எண் 8838034739 வழங்கப்பட்டுள்ளது. புதிய கொள்முதல் நடைமுறையின் மூலம் கொள்முதல் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் போட்டித்தன்மையுடனும் முறையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை