ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைப் பற்றி... கிளென் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான மேக்ஸ்வெல், 2013-இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 38 வயதான மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியாவுக்காக மூன்று வடிவங்களிலும் 7 டெஸ்ட் போட்டிகள், 149 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 130 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஒருநாள் போட்டிகளில் 3,990 ரன்களும், டி20ஐ போட்டிகளில் 2,897 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 339 ரன்களும் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, பந்துவீச்சாளராக அசத்திய மேக்ஸ்வெல், 136 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரானார். கடந்தாண்டு நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒட்டுமொத்தமாக முடிவுரை எழுதியிருக்கிறார் மேக்ஸ்வெல். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗