கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்திய 75 மேற்பார்வையாளர்கள் பணியிடைநீக்கம். டாஸ்மாக் - பிரதிப் படம் கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்திய 75 மேற்பார்வையாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலி மதுபாட்டில்களை திரும்புப் பெறும் திட்டத்தை ரத்துசெய்து, தனியார் முகமை அமைத்து பெற்றுக்கொள்ள வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கூட்டுக்குழு சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் திங்கள்கிழமை 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக ஒசூர் கோட்டத்தில் ஒசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி ஆகிய பகுதகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக ஒசூர் கோட்டத்தில் நாளொன்றுக்கு அரசுக்கு ரூ. 1.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் 110 கடைகளில் பணியாற்றும் 387 பேரில் முதல்கட்டமாக 75 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 75 பேர் பணியிடைநீக்கம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗