இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
இண்டியா கூட்டணி பொதுக் கூட்டத்தால் டெல்லி வர்த்தகர்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி: இண்டியா கூட்டணி நடத்​திய பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டத்​தால் டெல்லி வர்த்​தகர்​களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்​பட்​ட​தாக சிடிஐ அமைப்​பின் தலை​வர் தெரிவித்துள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் பதவி விலக வலி​யுறுத்தி டெல்லி ராம் லீலா மைதானத்​தில் நவம்​பர் 1-ம் தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடை​பெறும் என இண்​டியா கூட்​டணி அறிவித்தது. தீபாவளி பண்​டிகை வர்த்​தகம் பாதிக்​கப்​படும் என்பதால் பேரணியை தள்ளி வைக்க வேண்​டும் என்று வர்த்​தகர் சங்​கங்​கள் கோரிக்கை விடுத்​தன. இதை நிராகரித்த இண்​டியா கூட்​ட​ணி, நேற்று முன்​தினம் திட்​ட​மிட்​டபடி பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டத்தை நடத்​தி​யது. இதுகுறித்து வணிக மற்​றும் தொழில் சம்​மேளன (சிடிஐ) தலை​வர் பிரிஜேஷ் கோயல் கூறிய​தாவது: டெல்லி ராம் லீலா மைதானத்​தைச் சுற்றி முக்​கிய​மான சுமார் 20 முதல் 25 சந்​தைகள் இயங்கி வரு​கின்​றன. இப்​பகு​தி​யில் சுமார் 3 லட்​சம் கடைகள் உள்​ளன. தீபாவளி வர்த்​தகம் சூடு​பிடித்​துள்ள நிலை​யில் பேரணி நடைபெற்ற​தால் வர்த்​தகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. அகில இந்​திய வர்த்​தகர்​கள் கூட்​டமைப்​பின் (சிஏஐடி) கீழ் பல்​வேறு சந்​தைகளைச் சேர்ந்த வர்த்​தகர்​களை உள்​ளடக்​கிய வாட்ஸ்அப் குழுக்​களிட​மிருந்து பெற்ற தரவு​களின் அடிப்​படை​யில் சுமார் 80% கடைகள் மூடப்​பட்​டிருந்​தன. கடைகள் திறக்கப்பட்டிருந்த இடங்​களி​லும் கூட விற்​பனை என்​பது பெயரளவில்​கூட இல்​லை. சரக்​கு​களை ஏற்றி இறக்​கும் பணி​கள் முற்​றி​லு​மாக முடங்​கின. டெல்​லியைச் சுற்​றி​யுள்ள நகரங்​களி​லிருந்து வாடிக்​கை​யாளர்கள், விநி​யோகஸ்​தர்​கள் என சுமார் 4 லட்​சம் பேர் வரு​வார்​கள். ஆனால் இந்​தப் பேரணி காரண​மாக அவர்​கள் வரவில்​லை. மேலும் சுமார் 5 ஆயிரம் வாக​னங்​கள் பழைய டெல்லி மற்​றும் மத்திய டெல்லி சந்​தைகளுக்கு பொருட்​களை கொண்​டு​செல்ல முடிய​வில்​லை. இதன் காரண​மாக மொத்​தத்​தில் வர்த்​தகர்​களுக்கு சுமார் ரூ.10,000 கோடி வரை இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த வணிக முடக்கத்​துக்கு யார் இழப்​பீடு வழங்​கு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். காஷ்மீர் கேட் பகு​தி​யைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட வாகன உதிரி​பாகங்​கள் வர்த்​தகர் சங்​கத் (ஏபிஎம்ஏ) தலை​வர் வினய் நரங் கூறும்​போது, “நாங்​கள் எந்​தவொரு அரசியல் கட்​சி​யுட​னும் இணைந்​தவர்​கள் அல்ல, ஜனநாயகப் போராட்​டங்​களுக்கு எதி​ரானவர்​களும் அல்ல. ஆனால் நேர​மும் இடமும் முற்​றி​லும் தவறானவை. ஆசி​யா​வின் மிகப்​பெரிய வணி​கப் பகு​தி​யின் நடுப்​பகு​தி​யில் ராம் லீலா மைதானம் அமைந்​துள்​ளது. சாந்​தினி சவுக், சடார் பசார், தர்யா கஞ்ச், மோரி கேட் மற்​றும் காஷ்மீர் கேட் போன்ற முக்​கியச் சந்தைகள் மூன்று கிலோமீட்​டர் சுற்​றள​வில் உள்​ளன. இந்நிலையில் இங்கு போ​ராட்​டம் நடப்​ப​தால்​ வர்த்​தகம்​ கடுமையாக பா​திக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை