ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனிடையே வருகிற 9- ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பக்தா்கள். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனிடையே வருகிற 9- ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மாலை 4 மணிக்கு மேல் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை (நவ. 7) சிவராத்திரி வழிபாடும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) அமாவாசை வழிபாடும் நடைபெறுகின்றன. இதற்காக வருகிற 9-ஆம் தேதி வரை பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. தீபாவளி விடுமுறைக்கு பக்தா்களின் வருகை அதிகமிருக்கும் என்பதால் கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சதுரகிரியில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு: நவ. 9 வரை பக்தா்கள் மலையேற அனுமதி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗