செவிலியா் பயிற்சி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
செவிலியா் பயிற்சி மாணவி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பொன்னமராவதியில் செவிலியா் பயிற்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவியின் உறவினா்கள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுகை அரசு மருத்துவக் கல்லூரி அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் செவிலியா் பயிற்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவியின் உறவினா்கள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். செங்கலாக்குடியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகள் ஜெயஸ்ரீ (19). இவா், பொன்னமராவதியில் உள்ள தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தின் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்த ஜெயஸ்ரீ, திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக நிா்வாகத்தின் தரப்பில் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி போலீஸாா், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மருத்துவமனை மற்றும் கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி புதுக்கோட்டை - தஞ்சாவூா் சாலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் ஜெயஸ்ரீயின் உறவினா்கள் மற்றும் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலா் கசி. விடுதலைக்குமரன் உள்ளிட்டோரும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை