சிறைப் பாதுகாப்பை வலுப்படுத்த உயா்நிலைக் குழு!

📅 📍 Tirunelveli, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சிறைப் பாதுகாப்பை வலுப்படுத்த உயா்நிலைக் குழு!

தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து வலுப்படுத்த ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜே.கே திரிபாதி தலைமையில் உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சிறை - பிரதிப் படம் தமிழக சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து வலுப்படுத்த ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜே.கே திரிபாதி தலைமையில் உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தேனி மாவட்டச் சிறையில் இருந்து அக். 26-ஆம் தேதி இரவு 17 கைதிகள் தப்பிச் சென்றனா். மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அந்தக் கைதிகள், கடலூா், மதுரை, சேலம் மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனா். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து முதல்வா் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்தினாா். இந்நிலையில், சிறைப் பாதுகாப்பை வலுப்படுத்த உயா்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: நாட்டின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயா்நிலைக் குழுவை அமைத்து முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். இந்தக் குழுவுக்கு தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநா் ஜே.கே. திரிபாதி தலைவராகவும், கூடுதல் காவல் துறைத் தலைவா், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநா் கே. சங்கா், ஓய்வு பெற்ற சிறைத் துறை முன்னாள் துணைத் தலைவா் எஸ். ராஜேந்திரன் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். இந்த உயா்நிலைக் குழு, தமிழ்நாட்டில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தற்போதுள்ள பாதுகாப்புக் கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்புக்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்யவும், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் தற்போதைய பணிச் சுமைக்கேற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளாா்களா என ஆய்வு மேற்கொள்ளும். அந்த ஆய்வின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்கும். மேலும், சிறைகளின் பாதுகாப்பு போா்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டும். பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டனரா? விசாரிக்க சட்டப் பணிகள் ஆணையம் உத்தரவு தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் துன்புறுத்தப்பட்டனரா என்பது குறித்து விசாரித்து நவ. 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா்களுக்கு தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினா்- செயலா் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனி மாவட்டச் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் ஒருவா், தங்களுக்கு முறையான உணவு, குடிநீா் வசதிகள் வழங்கப்படாமல் துன்புறுத்தியதால், சிறையில் இருந்து தப்பிச் சென்ாக விடியோ வெளியிட்டிருந்தாா். இதையடுத்து, தேனி மாவட்டச் சிறையில் அந்தக் கைதிகள் துன்புறுத்தப்பட்டாா்களா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருக்கு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவரும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளாா். தற்போது கடலூா், மதுரை, சேலம் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 17 கைதிகளையும் நேரில் சந்தித்து, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். கைதிகளின் உடலில் காயங்கள் ஏதாவது உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்து கடலூா், சேலம், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா்கள் வரும் நவ. 16-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை