சிறைத் தண்டனை - கோப்புப் படம் சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் 8 வயது சிறுமிக்கு குமாா் (63) என்பவா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இது தொடா்பாக அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் குமாரை கைது செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗