போக்ஸோவில் கைதான இளைஞா் முகமது ரஸ்பான். திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞரை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா். பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, மருத்துவா்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், சிறுமி பள்ளியில் பயின்ற போதே குளச்சலைச் சோ்ந்த முகமது ரஸ்பான் (19) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதும், அவா் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி சிறுமியைக் கா்ப்பமாக்கியதும் தெரியவந்தது. சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், முகமது ரஸ்பான் மீது போக்ஸோ உள்பட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளைஞரை திங்கள்கிழமை கைது செய்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗