சூர்யா - நஸ்ரியா நடிப்பில் 'சீன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
சூர்யா - நஸ்ரியா நடிப்பில் 'சீன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனம்

பட மூலாதாரம், Sony Music South நடிகர் சூர்யா நடித்துள்ள 'சீன்' திரைப்படம் இன்று (நவம்பர் 6) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 'ரோமாஞ்சம்', 'ஆவேஷம்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன், தமிழில் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இது. இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லின், ஆனந்தராஜ், லால், பிரபல யூடியூபர் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். காவல் அதிகாரிக்கும் தொடர் கொலைகளில் ஈடுபடும் நபருக்கும் இடையிலான மோதலை நகைச்சுவையுடன் இந்தத் திரைப்படம் சொல்கிறது. 'சீன்' திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன. பட மூலாதாரம், Sony Music South குற்றப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் திறமைசாலியான இன்பராஜ், தனக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகக் காவல் பணியிலிருந்து விலக முடிவெடுக்கிறார். ஆனால், அவர் ஏற்கெனவே விசாரித்த வழக்குடன் தொடர்புடைய புதிய கொலைச் சம்பவங்கள் நிகழ்கின்றன. End of அதிகம் படிக்கப்பட்டது இந்தக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு மீண்டும் இன்பராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஈஸ்வரன் என்ற கொலையாளியாக நஸ்லின் நடித்துள்ளார். இன்பராஜின் விசாரணையில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நஸ்ரியாவும் இணைகிறார். இன்பராஜ் எதிர்கொள்ளும் தனிப்பட்ட பிரச்னை என்ன? கொலையாளியை அவர் எப்படிக் கண்டுபிடிக்கிறார்? இந்த விசாரணையில் அவருக்கு உதவியாக இருப்பவர்கள் யார்? என்பதே மீதிக் கதை. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "சீன் திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லின் ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக நஸ்ரியாவின் நகைச்சுவை நடிப்பும் நஸ்லினின் இயல்பான வில்லத்தனமும் கவனம் ஈர்க்கின்றன" என்ற கருத்தை என்டிடிவி தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளது. நஸ்ரியா நடித்துள்ள மாயா கதாபாத்திரம், கதாநாயகனுக்கு உதவியாக வருவதுடன் படத்தின் நகைச்சுவைக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குவதாக அந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. நஸ்லின் வழக்கமான வில்லன்களைப் போல ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தாமல், இயல்பான உடல்மொழியின் மூலம் அச்சத்தை ஏற்படுத்துவதாக தினமணி பாராட்டியுள்ளது. சூர்யாவின் தந்தையாக நடித்துள்ள ஆனந்தராஜ் உள்ளிட்ட துணை நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பலம் சேர்ப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. நஸ்ரியாவின் நடிப்பைப் பாராட்டியுள்ள தி இந்து, அவர் திறமையான சண்டைக் கலைஞராகக் காட்டப்படும் காட்சிக்குப் பிறகு, இரண்டாம் பாதியின் முக்கியமான தருணம் ஒன்றில் அந்தத் திறன் பயன்படுத்தப்படாதது திரைக்கதையில் கேள்வியை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளது. ஈஸ்வரன் கதாபாத்திரம் அச்சுறுத்தலாக இருந்தாலும், அவரது கொடூரத்தன்மையை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் அந்த நாளிதழ் விமர்சித்துள்ளது. பட மூலாதாரம், Sony Music South 'சீன்' திரைப்படத்தை மிகவும் பொழுதுபோக்கான தொடர் கொலையாளி திரைப்படம் என்று தெரிவித்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஐந்துக்கு நான்கு நட்சத்திரங்களை வழங்கியுள்ளது. வழக்கமான குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையையும் பரபரப்பையும் ஒன்றாகக் கையாண்டிருப்பது படத்தின் முக்கியச் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜித்து மாதவன் தனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, வழக்கத்திற்கு மாறான மனிதர்களையும் அவர்களுக்கு இடையே நிகழும் சம்பவங்களையும் நகைச்சுவைக்குப் பயன்படுத்தியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கதாநாயகனின் பலவீனங்களையே கதையின் முக்கிய அம்சமாக மாற்றியிருப்பதுடன், சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்துக்கும் திரைக்கதைக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது. வெறும் அதிரடிக் காட்சிகளையும் பின்னணி இசையையும் நம்பாமல், திரைக்கதைக்காக இயக்குநர் மெனக்கெட்டிருப்பதாக தினமணி குறிப்பிட்டுள்ளது. சூர்யாவுக்கும் நஸ்ரியாவுக்கும் இடையிலான காட்சிகள், இறுதிக்கட்ட மோதல், ரசிகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சில எதிர்பாராத தருணங்கள் ஆகியவை படத்திற்குப் பலம் சேர்ப்பதாக அந்த நாளிதழ் விமர்சனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Sony Music South 'சீன்' திரைப்படத்தின் முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்காக அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவதால், திரைக்கதையின் வேகம் குறைவதாக என்டிடிவி விமர்சித்துள்ளது. குறிப்பாக, சில துணைக் கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகளைச் சுருக்கியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சூர்யா மற்றும் நஸ்ரியா இடையிலான காதல் தொடர்பான காட்சிகள் கதையுடன் இயல்பாகப் பொருந்தவில்லை என்றும் என்டிடிவி தெரிவித்துள்ளது. நஸ்லினின் வில்லன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தாலும், அதை இன்னும் வலுவாகக் கையாண்டிருக்கலாம் என்று தி இந்து விமர்சித்துள்ளது. நஸ்ரியாவின் திறமைகளை முக்கியமான சில காட்சிகளில் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. சில காட்சிகளில் தர்க்கரீதியான குறைபாடுகள் இருப்பதும், கதையின் ஓட்டம் சீராக இல்லாததும் திரைப்படத்தின் பலவீனங்களாக விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 'சீன்' திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜ்மல் சாபு படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். "சுஷின் ஷ்யாமின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளன. பாடல்களுக்காகத் தனியாக நடனக் காட்சிகளைப் பயன்படுத்தாததும் வரவேற்கத்தக்கது" என்று தினமணி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே மேலும் பிரபலமடைந்திருந்தால், திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாகம் அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் அந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. சுஷின் ஷ்யாமின் இசை படத்தின் வித்தியாசமான நகைச்சுவை உணர்வுக்குப் பொருத்தமாக இருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. வினீத் அகஸ்டியனின் ஒளிப்பதிவையும், குறிப்பாக இறுதிக்கட்டக் காட்சிகளில் அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பையும் அந்த ஊடகம் பாராட்டியுள்ளது. கதாபாத்திரங்களின் தனித்துவத்தையும் அவர்கள் வாழும் சூழலையும் ஒளிப்பதிவு சிறப்பாக வெளிப்படுத்துவதாக தி இந்து தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Sony Music South இரண்டாம் பாதியில் இன்பராஜின் குடும்பத்தினரும் மாயாவும் விசாரணையில் இணைந்த பிறகு, நகைச்சுவைக் காட்சிகளும் எதிர்பாராத சம்பவங்களும் படத்திற்கு சுவை கூட்டுவதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. இருப்பினும், இன்பராஜுக்கும் மாயாவுக்கும் இடையிலான காதல் தொடர்பான காட்சிகள் கதையுடன் இயல்பாக இணைக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளது. மற்றொருபுறம், கொலையாளிக்கும் காவல் அதிகாரிக்கும் இடையிலான மோதலைச் சுவாரஸ்யமாக அமைத்திருப்பதையும், படத்தின் இறுதிக்கட்டத்தில் ரசிகர்களைக் கவரும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதையும் தினமணி பாராட்டியுள்ளது. சில காட்சிகளின் தர்க்கரீதியான தொடர்ச்சியில் குறைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நகைச்சுவையும் அதிரடியும் கலந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தை ஜித்து மாதவன் வழங்கியிருப்பதாக தி இந்து மதிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம், Sony Music South வழக்கமான அதிரடி நாயகனாக இல்லாமல், பலவீனங்களுடன் செயல்படும் காவல் அதிகாரியாகச் சூர்யா நடித்திருப்பது இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சம் என விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். "சூர்யா தனது கதாபாத்திரத்தில் உற்சாகமாக நடித்துள்ளார். அவரது உடல்மொழியும் நகைச்சுவை உணர்வும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன" என்று என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. 'சிங்கம்', 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட சூர்யாவின் முந்தைய திரைப்படங்களை நினைவுபடுத்தும் வசனங்களும் பாடல்களும் நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது. சூர்யா தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளும் காட்சிகளும், தனது பாதிப்பை மறைத்துக் கொண்டு திறமையான காவல் அதிகாரியாகச் செயல்பட முயலும் விதமும் கவனம் ஈர்ப்பதாக தினமணி தெரிவித்துள்ளது. சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை அவரிடமிருந்து இயக்குநர் பெற்றிருப்பதாக தி இந்து பாராட்டியுள்ளது. வழக்கமான வெகுஜன நாயகனுக்கான அம்சங்களையும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பையும் இணைத்திருப்பதன் மூலம் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பைப் பார்க்க முடிவதாக அந்த விமர்சனம் கூறுகிறது. முதல் பாதியின் வேகம் மற்றும் சில காட்சிகளின் நீளம் குறித்த குறைகள் இருந்தாலும், சூர்யாவின் நடிப்பு, ஜித்து மாதவனின் நகைச்சுவை கலந்த திரைக்கதை, நஸ்லினின் வில்லன் கதாபாத்திரம் ஆகியவை படத்தைச் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அனுபவமாக மாற்றுவதாக ஊடக விமர்சனங்கள் கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை