சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதைப் பற்றி... சி. விஜயபாஸ்கர். சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான சி. விஜயாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாகக் கூறி, 2021-இல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த மார்ச் 21-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நிகழாண்டு தொடக்கத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் விசாரணைக்காக, தம்பதியரில் ஒருவர் இந்த வெள்ளிக்கிழமை சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும், மற்றொருவர் அடுத்த வாரம் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. The Enforcement Directorate has issued summons to former minister C. Vijayabaskar and his wife, Ramya, in connection with a disproportionate assets case. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗