தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு அவற்றின் எண்ணிக்கை 75,032-இல் இருந்து 75,088-ஆக அதிகரித்துள்ளது. அர்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம் தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு அவற்றின் எண்ணிக்கை 75,032-இல் இருந்து 75,088-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் புதிதாக 56 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளதாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2027 ஜன.1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் கடந்த அக்.15-ஆம் தேதி தொடங்கி, ஜன.4 வரை நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 234 வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் 38 மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினா். அவா்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 1,200-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல், பிரிவுகளை மறுசீரமைத்தல், வாக்குச்சாவடிகளின் இடம் மற்றும் கட்டடத்தை மாற்றுதல், பெயா் மாற்றம், வாக்குச்சாவடிகளை இணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கூடுதலாக 56 வாக்குச்சாவடிகள்: மறுசீரமைப்பின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் குறைவான வாக்காளா்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்கள் 2 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை. வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்குள் அரசியல் கட்சி அலுவலகங்கள் இல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் ஒரே வாக்காளா் பட்டியல் பிரிவிலும், ஒரே வாக்குச்சாவடியிலும் இடம்பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத் தோ்தல் அலுவலா்களால் இறுதி செய்யப்பட்ட பட்டியல், தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் மூலம் தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி, மறுசீரமைப்புக்கு முன்பு 75,032-ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை தற்போது 75,088-ஆக உயா்ந்துள்ளது. மறுசீரமைப்பின்போது 134 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டன; 78 வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டன. மேலும், 357 வாக்குச்சாவடிகளின் இடங்கள் மாற்றப்பட்டதுடன், 491 வாக்குச்சாவடிகளில் பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா் அா்ச்சனா பட்நாயக். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கூடுதலாக 56 வாக்குச்சாவடிகள்: தலைமை தோ்தல் அதிகாரி அறிவிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗