தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ

நந்திகள் அனைத்தும் கருவறை இறைவனை நோக்காமல் வெளி வாயிலை நோக்கியவாறு அமைந்திருப்பது தனிச் சிறப்பு. சிவாலயங்களில் நந்தி பகவான் கருவறை இறைவனை நோக்கி வீற்றிருப்பதே மரபு. ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை ஸ்ரீபிரஹந்நாயகி உடனுறை ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், நந்திகள் அனைத்தும் கருவறை இறைவனை நோக்காமல் வெளி வாயிலை நோக்கியவாறு அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இறைவன் விரும்பி உறைந்த இடமாதலால் பழங்காலத்தில் "இறைவாசநல்லூர்' என வழங்கப்பட்ட இவ்வூர், காலப் போக்கில் "எலவனாசூர்' என்றும், பின்னர் "எலவனாசூர்கோட்டை' என்றும் மருவியது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெரும் பெருமைகளை ஒருங்கே கொண்ட தலம். இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இவ்வாலயம், யானைகள் ஏற முடியாத உயர்ந்த மேடை அமைப்பில் உருவாக்கப்பட்ட மாடக்கோயில் அமைப்பைச் சார்ந்தது. உயர்ந்த தளம், திருச்சுற்று மதில்கள், ஆறு நிலைகளைக் கொண்ட கம்பீரமான ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. மேற்கு முகமாக எழுந்தருளியுள்ள மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுயம்புத் திருமேனி. திருக்கோவலூரை ஆண்ட தெய்விக மன்னன் புத்திரப் பேறு வேண்டி இத்தல இறைவனை வழிபட்டு, மகப்பேறு அடைந்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இதனால், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, அர்த்தநாரீஸ்வரரையும், பிரஹந்நாயகி அம்பாளையும் நெய் தீபமிட்டு வழிபட்டால் புத்திர தோஷங்கள் நீங்கி, மகப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தல இறைவனைச் சோழர் கல்வெட்டுகள் "ஊர்ப்பாகங் கொண்டருளிய மகாதேவர்', "ஊர்ப்பாகங் கொண்ட நாயனார்', "சிகரசிகாமணி நாதர்' எனப் போற்றுகின்றன. கிழக்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அன்னை ஸ்ரீ பிரஹந் நாயகி அருள்பாலிக்கிறார். சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம், கணவன் - மனைவி இடையேயான பேதமற்ற சமத்துவத்தை உணர்த்துகிறது. எனவே, கருத்து வேறுபாடுகள் நீங்கித் தம்பதியர் ஒற்றுமையுடன் நல்வாழ்வு வாழவும், நீண்டநாள்களாக திருமணம் ஆகாதவர்களுக்குத் தடைகள் அகன்று திருமணம் நடைபெறவும், குடும்ப நலம் வேண்டியும் இவர்களை வழிபடுவது பலன்தரும். இத்திருக்கோயிலின் சிறப்புகளையும் வரலாற்றையும் 16}ஆம் நூற்றாண்டுப் புலவர் புராணத் திருமலைநாதர் இயற்றிய "இறைவாசநல்லூர் புராணம்' எடுத்துரைக்கிறது. கோட்டச் சிற்பமாக அருளும் வீராசன தட்சிணாமூர்த்தி, கி.பி. 1070 }1289 காலகட்டத்துச் சிற்பக்கலை நுட்பத்துக்குச் சான்றாகத் திகழ்கிறார். கோயில் கோபுரத்தின் பின்புறம் அமைந்துள்ள தண்ட தீர்த்தம் முக்கிய தீர்த்தமாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு பிதுர்களை நினைத்து சிரார்த்தம் உள்ளிட்ட கர்மங்களைச் செய்யும் மரபும் தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தின் தலவிருட்சமாகப் பலாமரம் போற்றப்படுகிறது. முதலாம் ராஜராஜன் கால கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்றுப் பதிவுகளும், சோழர், பாண்டியர், விஜயநகர ஆட்சியாளர்கள் மற்றும் சிற்றரசர்களின் பங்களிப்புகளும் இக்கோயிலின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. கல்வெட்டுகள் உணர்த்தும் தொன்மை, மாடக்கோயில் கட்டட நேர்த்தி, வழிபாட்டுச் சிறப்பு ஆகிய பெருமைகளைக் கொண்ட இந்தக்கோயில், அமைதியையும் ஆன்மிக மேன்மையையும் நல்கும் சிறந்த திருத்தலமாக விளங்குகிறது. அர்த்தநாரீஸ்வரருக்கு பிரதோஷ பூஜையும், தண்டபாணிக்கு கிருத்திகை வழிபாடும் நடைபெறுகின்றன. தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை பிரஹந்நாயகிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெறுகிறது. தரிசனத்துக்காக காலை 7.10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் எலவனாசூர்கோட்டை ஸ்ரீபிரஹந்நாயகி உடனுறை ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், உளுந்தூர்பேட்டை } கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்விரு நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. - முனைவர் எஸ். பாலசுப்ரமணியன் தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை