தவெகவின் கல்வி விருது விழா பற்றி.. தவெக கல்வி விருது விழா - கோப்புப் படம் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 11, 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத்தொகையுடன் கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரையில் தவெக கல்வி விருது விழா நடைபெறாத நிலையில், இதற்கு முன்னர் நடத்தப்பட்டவை அரசியலுக்காகவா என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். இந்த நிலையில், 2025 - 26 கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா, வருகிற நவம்பர் 4 ஆம் தேதியில் நடத்த தவெக திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக 3 ஆண்டுகள் நடைபெற்ற விழாக்களில் தவெக தலைவராக பரிசு வழங்கிய விஜய், முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பரிசு வழங்குகிறார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவெக கல்வி விருது வழங்கும் விழா எப்போது?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗