பண்டிகைக் கால நெரிசலைச் சமாளிக்கும் வகையில், ரயில்வே துறை தீவிர ஏற்பாடுகள் குறித்து... ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - கோப்புப்படம் புது தில்லி: தீபாவளி மற்றும் சத் பண்டிகைக் கால நெரிசலைச் சமாளிக்கும் வகையில், ரயில்வே துறை தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது; 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதுடன், முக்கிய ரயில் நிலையங்களில் 700 செய்யறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான காத்திருப்புப் பகுதிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுடன் தெரிவித்ததாவது: தீபாவளி மற்றும் சத் பண்டிகைகளின் போது ஏற்படும் அதிகப்படியான பயணிகள் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, ரயில்வே அமைச்சகம் தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரயில்வே துறை 18,000 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மேலும், கூடுதல் ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்களைப் பணியமர்த்துவதுடன், முக்கிய ரயில் நிலையங்களில் செய்யறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களையும் நிறுவி கண்காணித்து வருகிறது. பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், கூட்ட நெரிசலைச் சிறப்பாகக் கையாளவும் புது தில்லி ரயில் நிலையத்தில் 700-க்கும் மேற்பட்ட செய்யறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பயணிகளின் வசதிக்காகவும், ரயில் நிலையத்தில் அதிக நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்குத் தனித்தனி காத்திருப்புப் பகுதிகள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பண்டிகைக் காலங்களில் அதிக பயணிகள் வருகை தரும் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ரயில் நிலையங்களிலும், இதே போன்ற காத்திருப்புப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தெற்கு ரயில்வே சாா்பில் 132 சிறப்பு ரயில்கள் தீபாவளியையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே சாா்பில் 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இவை 207 நடைகள் இயக்கப்படும். மேலும், 22 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டதுடன், காத்திருப்போா் பட்டியலில் உள்ள பயணிகளின் வசதிக்காக 8 முன்பதிவில்லா மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல், எழும்பூா், பெரம்பூா், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வழக்கமான பாதுகாப்புப் பணியாளா்களுடன் கூடுதலாக 180 ரயில்வே பாதுகாப்புப் படையினா், 25 ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், காவல் துறையினா், தேசிய மாணவா் படையினா் மற்றும் தன்னாா்வ அமைப்பினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. நீண்டதூர ரயில்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி, சத் பண்டிகை: முக்கிய ரயில் நிலையங்களில் ஏஐ கேமரா கண்காணிப்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗