தில்லி தலைமையின் உத்தரவா? மாநில உரிமைகள் மீது தவெக அரசுக்கு அக்கறை இல்லை! கனிமொழி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தில்லி தலைமையின் உத்தரவா? மாநில உரிமைகள் மீது தவெக அரசுக்கு அக்கறை இல்லை! கனிமொழி

மத்திய - மாநில உறவு குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு கனிமொழி கண்டனம்... முதல்வர் விஜய் - திமுக எம்.பி. கனிமொழி - (கோப்புப் படம்) தமிழ் மக்களின் மீதும் மாநில உரிமைகள் மீதும் தவெக அரசுக்கு அக்கறை இல்லை என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியுள்ளார். மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, சென்னையில் செய்தியாளர்களுடன் பேசுகையில், "முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திலும் மத்திய - மாநில அரசு இடையே உள்ள உறவு குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளித்த அறிக்கையைப் பயன்படுத்தி நம் மாநில உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்திலும் இது தொடர்கிறது. சிலரை மகிழ்ச்சிப்படுத்தவும் தங்களின் பயத்தின் காரணமாகவும் குரியன் குழுவை கலைத்திருக்கிறார்கள். தமிழ் மக்களின் மீதும் மாநில உரிமைகள் மீதும் தவெக அரசுக்கு அக்கறை இல்லை. கவலை இல்லை. மத்திய பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்க தவெகவுக்கு திராணி இல்லை என்பது இதன் மூலமாக தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்" என்று பேசினார். முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் உரிமைப் போராட்டத்திற்கு வழிகாட்டும் வகையிலும் திமுக ஆட்சியில் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவைத் தவெக அரசு கலைத்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே இந்தக் குழு மத்திய - மாநில உறவுகள் குறித்த தங்களது ஆய்வறிக்கையின் முதல் பாகத்தைச் சமர்ப்பித்துவிட்ட நிலையில், குழுவின் பணி முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கலைப்பதற்கான அவசியம் என்ன? மாநில சுயாட்சிக் கொள்கையின் மீதான வெறுப்பா? இல்லை தில்லி தலைமையின் உத்தரவா? மாநில தன்னாட்சி உரிமையைப் பாதுகாப்போம் என்று வசனம் பேசிக்கொண்டே மாநில சுயாட்சிக்குக் குழிபறித்திருக்கிறது தவெக அரசு. இந்தியாவில் கூட்டாட்சி அரசியலை வலுப்படுத்துவதற்கான தமிழ்நாட்டின் முன்னெடுப்பைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®©à¯ à®à®°à®¿à®®à¯à®à®³à¯à®à¯ à®à®¾à®à¯à®à®µà¯à®®à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ à®à®³à¯à®³ மாநிலà®à¯à®à®³à®¿à®©à¯ à®à®°à®¿à®®à¯à®ªà¯ பà¯à®°à®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯ வழிà®à®¾à®à¯à®à¯à®®à¯ வà®à¯à®¯à®¿à®²à¯à®®à¯ à®à®´à® à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ மாணà¯à®ªà¯à®®à®¿à®à¯ நà¯à®¤à®¿à®¯à®°à®à®°à¯ திரà¯. à®à¯à®°à®¿à®¯à®©à¯ à®à¯à®à®ªà¯ à®à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ தலà¯à®®à¯à®¯à®¿à®²à¯ à®à®®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à® à®à®©à¯à®±à®¿à®¯-மாநில à®à®±à®µà¯à®à®³à¯ à®à¯à®±à®¿à®¤à¯à®¤ à®à®¯à®°à¯à®¨à®¿à®²à¯à®à¯ à®à¯à®´à¯à®µà¯à®¤à¯ தவà¯à® à®à®°à®à¯ à®à®²à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®ªà¯à®ªà®¤à¯â¦ தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை