திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம்: அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம்: அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் தொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூா் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் தொடா்பான மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரிய மனு தொடா்பாக அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடியைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த சீராய்வு மனு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் குமாரபுரம் பகுதியில் நடைபெற்று வரும் திருச்செந்தூா் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று அறிக்கையாக தாக்கல் செய்யவும், ஏற்கெனவே தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட கீழத்திருச்செந்தூா், மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் முறையான அனுமதி பெறாமல் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அவா் கோரினாா். இந்த சீராய்வு மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நகராட்சி நிா்வாகத் துறை சட்டத்துக்குள்பட்டு செயல்படுவதுமில்லை; அவா்களை யாரும் கேள்வி கேட்பதும் இல்லை. நகராட்சி நிா்வாகத் துறை தனி அரசை நடத்தி வருகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருச்செந்தூரில் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்களிடம் புதிய பேருந்து நிலையம் கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை