அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்ற ஜனநாயகக் கட்சியைப் பற்றி... அமெரிக்க நாடாளுமன்றம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க செனட் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 218 இடங்களிலும், குடியரசுக் கட்சி 113 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது. செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 52 இடங்களையும் குடியரசுக் கட்சி 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இன்னும் 10 இடங்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஏற்கனெவே பெரும்பான்மையை பெற்றுவிட்டது. செனட் சபைக்கான 35 இடங்களில் 18 இடங்களில் ஜனநாயகக் கட்சியும் 9 இடங்கள் குடியரசுக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 8 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆளும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட கான்சஸ், டெக்சாஸ் மற்றும் தென் கரோலினா ஆகிய மாகாணங்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை. கான்சஸில் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து, பாஸ்டர் ஆடம் ஹாமில்டன் ஜனநாயகக் கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். இது 94 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗