வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?

வங்கக் கடலில் புதிய புயல் காரணமாக தீபாவளிக்கு மழை பெய்யுமா? என்பது பற்றி.. புதிய புயல் - facebook வங்கக் கடலில் அக்.29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவானது. இதன் காரணமாக, நவம்பர் முதல் வாரத்தில் மழை நிலவரம் பற்றிய எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்துள்ளது. இது பற்றி வானிலை நிலவரங்களை கணித்து வெளியிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் எனப்படும் பிரதீப் ஜான் இன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நவம்பர் முதல் வாரம் குறித்து வெளியிட்டிருக்கிறார். அதில், நவம்பர் முதல் வார வானிலை பற்றி – மழைள் குறித்த நிலவரம் 'அர்னாப்' (Arnab) புயலின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதைக் காண முடிகிறது. இந்த வானிலை அமைப்பு வட தமிழகத்தில் ஓரளவு மழையைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அதிகனமழைக்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இந்த காற்றழுத்த மண்டலத்திற்கு வடக்குப் பகுதியிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அங்குதான் காற்றின் சங்கம மண்டலம் (convergence zone) வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வானிலை மாதிரிகள், இந்த அமைப்பு ஒரு 'காற்றழுத்த மண்டலமாக' (Depression) மட்டுமே நீடிக்கும் என்று காட்டுகிறது, இது வலுவடையாமல், தீவிரமடையாமல் இருந்தால், வட தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாறாக, இந்த அமைப்பு புயலாக வலுவடைந்தால், வட தமிழகம் இந்த புயல் சின்னத்துக்கு பிரியாவிடை கொடுக்க வேண்டியதுதான். ஏனெனில், புயலாக மாறிவிட்டால் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடும். புயலின் சுழற்சியால், அதன் மேகக் கூட்டங்கள் தமிழகப் பகுதியிலிருந்து விலகிச் செல்லக்கூடும். எனவே, இப்போதைக்கு தமிழகத்தில் வரும் வாரத்தில் மழைப்பொழிவு எப்படி இருக்கும் என்பது குறித்து சொல்ல முடியாது, காற்றழுத்த தாழ்வு பயணிக்கும் பாதை மற்றும் வலுப்பெறும் அமைப்பைப் பொறுத்தே மழைக்கான வாய்ப்புகள் குறித்து கணிக்க முடியும். அடுத்த 1–2 நாள்களில் கூடுதல் தெளிவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். வானிலை ஆய்வு மைய அறிவிப்பு என்ன? தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இன்று மேற்கு - வடமேற்குத் திசையில் நகா்ந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான்-நிக்கோபாா் தீவுப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் சின்னம் மேற்கு-வடமேற்குத் திசையில் தொடா்ந்து நகா்ந்து, அடுத்த 2 நாள்களில் தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான்-நிக்கோபாா் தீவுப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை