ஷாருக் கானின் கிங் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவே ரூ. 655 கோடி வசூல் செய்ததைப் பற்றி... ஷாருக் கானின் ‘கிங்’.! ஷாருக் கானின் கிங் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னதாகவே ரூ. 655 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. பாலிவுட்டில் பதான், வார், பேங் பேங் ஆகிய படங்கள் எடுத்து பிரபலமானவர் ஹிந்தி இயக்குநர் சித்தார்த் ஆனந்த். இவருடைய இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் மீண்டும் நடிக்கும் கிங் திரைப்படத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இவர்களுடைய கூட்டணியில் வெளியாகியிருந்த பதான் திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. ரூ. 350 கோடியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஷாருக் கானின் பிறந்தநாளான நேற்று (நவ. 2) முதல் பாடல் மில் ஜாயே வெளியான நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரத்தில் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதானின் வெற்றியால் விநியோக ஒப்பந்தங்களையும், டிஜிட்டல் மற்றும் இசை உரிமைகளையும் பெற்றுள்ளது. ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், இப்படத்தின் வெளிநாட்டு உரிமைகளை ரூ. 175 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் ரூ. 100 கோடியைத் தாண்டாத நிலையில், மிகப்பெரிய சாதனையை கிங் படம் நிகழ்த்தியிருக்கிறது. இந்தப் படத்தின் இந்திய விநியோக உரிமைகள் பென் மருதாருக்கு ரூ. 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் தளம் இந்தப் படத்தின் இணைய உரிமைகளை ரூ. 150 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், அதே சமயம் சாட்டிலைட், இசைக்கான உரிமைகள் முறைகள் ரூ. 25 கோடி மற்றும் ரூ. 65 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியீட்டுக்கு முன்பே ரூ. 655 கோடி வசூல் செய்த ஷாருக் கானின் ‘கிங்’.!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗