எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம் சென்னை: “தமிழகத்துக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை. விலைவாசி கட்டுப்பாட்டுக்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “வெளி சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு. இந்நிலையில், கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீணாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது. 250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. அதாவது, தமிழகத்துக்கு வந்த 450 டன் வெங்காயத்தை காணவில்லை. குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்த திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள் தான். இது என்ன சினிமாவா, டேக் சரியில்லை என்றால் கட் சொல்லிவிட்டு அடுத்த டேக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி. மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது. அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் தீவிரத்தன்மை புரியாமல், லெத்தார்ஜிக் ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம். விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெங்காயம் கொள்முதல் விவகாரம்: தவெக அரசு மீது பழனிசாமி சாடல்
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: hindutamil.in (original report) ↗