வெனிசுவேலாவைப்போல பிரேஸில் அதிபருக்கு எதிராக அமெரிக்கா படையெடுப்பு நடத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது... அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரேஸில் இடதுசாரி அதிபர் லூலா - AP பிரேஸில் நாட்டின் அதிபர் தேர்தலில், வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோவை தோற்கடித்து வெற்றிபெற்ற இடதுசாரி அதிபர் லூலா டா சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடும் என அஞ்சப்படுகிறது. பிரேஸில் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 25) நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில், 80 வயதான தற்போதைய இடதுசாரி அதிபர் லூலா டாசில்வா 51.21 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவைப் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ 48.79% வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே, ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள போல்சோனாரோ தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரேஸிலில் இருந்து தப்பித்து அர்ஜென்டீனா மற்றும் ஈக்வடார் நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவின் ஃபுளோரிடாவுக்கு குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா இடதுசாரி அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டதைப் போல பிரேஸில் அதிபர் லூலாவுக்கு எதிராகவும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், விரைவில் பிரேஸில் அரசுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிக்கவோ நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரேஸிலின் வலதுசாரி வேட்பாளர் போல்சோனாரோவுக்கு டிரம்ப் அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக, வெனிசுவேலாவில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க படைகள் அத்துமீறி நுழைந்து அதிபர் மதுரோவை நாடுகடத்திச் சென்றன. மேலும், கம்யூனிஸ்ட் நாடான கியூபாவுக்கு எதிராகவும் அமெரிக்க அரசு எரிபொருள் தடை விதித்து நெருக்கடி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வெனிசுவேலாவை போல..! பிரேஸில் இடதுசாரி அதிபருக்கு எதிராக அமெரிக்கா படையெடுப்பு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗