விஎஸ் பாபு வீடு திரும்பியதாகப் பரவும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறித்து.. கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு - file photo கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு, உடல் நலம் பெற்று குணமடைந்து வீடு திரும்பியதாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை என்ன? அவரது உடல்நிலை குறித்து எந்தத் தகவலும் அண்மைக் காலமாக வெளியாகாத நிலையில் சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு சில நாள்களாக அவரைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கிடையே, அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் அதில் உண்மையில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல் பொய்யானது என்ற தெரிய வந்துள்ளது. பேரவைத் தேர்தலில்... தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில், முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் வி.எஸ். பாபு. முதல்வர் வேட்பாளரையே தோற்கடித்த வி.எஸ். பாபு, தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
📢 விளம்பரம் • Advertisement
விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗