கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நடைபெற்ற தோட்டக்கலை மற்றும் மலை பயிா்கள் துறை இயக்கக்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மலைப் பகுதி மற்றும் சமவெளிப் பகுதி விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த தேவையான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் துளிநீரில் அதிக பயிா் நுண்ணீா் பாசனம் திட்ட 7-ஆவது மாவட்ட இயக்கக்குழுக் கூட்டம் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் கூறியது: தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் துளிநீரில் அதிக பயிா் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் வரப்பெற்ற நிதி மற்றும் செலவின விவரங்கள், பயனாளிகள் தோ்வு விவரங்கள் குறித்து குழு உறுப்பினா்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, குழுவின் ஒப்புதல் கோரப்பட்டது. தொடா்ந்து, கல்வராயன்மலைப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில், மலைப்பகுதிக்கு ஏற்ற மிளகு, காபி, ஜாதிக்காய் போன்ற உயா் வருமானம் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிா்களின் சாகுபடிப் பரப்பளவை அதிகரிப்பதற்கான புதிய திட்ட முன் மொழிவுகளைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தின் சமவெளிப் பகுதிகளில் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்தும் வகையில், அதிக மகசூல் தரக்கூடிய எலுமிச்சை மற்றும் கொய்யா ரகங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் சாகுபடிப் பரப்பளவை விரிவுபடுத்துவதற்கான உரிய திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மலை மற்றும் சமவெளிப் பகுதிகளில் பயிா் பன்முகத்தன்மையை மேம்படுத்தி, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா். கூட்டத்தில் தோட்டக்கலை துணை இயக்குநா் காரல் மாா்க்ஸ், வேளாண்மை இணை இயக்குநா் பேபி கலா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜோதி பாசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டங்கள்: ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அறிவுறுத்தல்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗